Karur controversy Karur controversy
தமிழ்நாடு

"கரூரில் ஒரு தீர்க்கப்படாத கணக்கு இருக்கிறது".. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் சர்ச்சை பேச்சு! உச்சநீதிமன்றத்தை நாடப்போகும் திமுக

உங்களுடைய மகன் உதயநிதியின் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்களே

Vinvizhi Leninton

நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி தவெக-வில் இணைந்த விழாவில் கிட்டத்தட்ட 10,000 அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இரண்டு விஜயபாஸ்கர்களின் ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், என். ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலையில் தவெக-வில் இணைந்தனர்.

இந்நிலையில் அந்த விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் ஒரு முக்கியமான கணக்கு வழக்கு இருப்பதாகவும், அதை முடிக்காமல் விடப்போவதில்லை என்றும் பேசினார். "எங்கள் தலைவர் மீது கை வைத்தீர்களே. எங்கள் மக்கள் மீது கை வைத்தீர்களே! ஸ்டாலின் அவர்களே. உங்களுடைய மகன் உதயநிதியின் வாழ்க்கைக்காக எங்களுடைய மக்களை காவல்துறை மூலமாக கொன்று குவித்தீர்களே அதற்கான பதில் கிடைக்கும். சட்டம் தன்னுடைய கடமையை செய்யும். கரூரில் என்ன நடந்தது என்று அருகில் இருந்து பார்த்தவர்" என்று பேசினார். மேலும் கரூரில் திட்டமிட்டு கூட்டநெரிசலை உருவாக்கியதாகவும் திருப்பூரில் காவல்துறை ஒத்துழைப்பு இல்லாததால் மீண்டும் கூட்டநெரிசல் சூழ்ச்சியை செய்ய நினைத்ததாகவும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

மேலும், கரூர் மக்களின் கண்ணீருக்கும், பாவத்திற்கும் சேர்த்துதான் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் தோல்வியை தழுவியதாகவும் அவர் பேசினார். அதிமுக - தவெக இனைந்த இந்த ஆட்சியில் மு.க. ஸ்டாலின்தான் கடைசி முதல்வர் என்றும் பேசினார். கொள்ளையடித்த பணத்தோடு லண்டனுக்கு போகும்படியும் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

இந்நிலையில், கரூரில் தனக்கு ஒரு பழைய கணக்கு இருக்கிறது அதை தீர்க்காமல் விடமாட்டேன் என்று பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கு CBI விசாரணையில் உள்ள நிலையில் ஆதவ் அர்ஜுனன் பேசியதற்கு உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.