சிறந்த மேடைப் பேச்சாளரும் எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் தற்போது விஜய்யின் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். திராவிட கழகத்தின் பேச்சாளராக இருந்த இவர் வைகோ அ கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது அவருடன் சேர்ந்து இவரும் திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து வெளியேறினார். பின்னர் வைகோவின் மதிமுக கட்சியில் கொக்கை பரப்பு செயலாளர் பதவி வகித்து வந்தார். மதிமுக கட்சியில் வைகோவிற்கு இணையான பேச்சாளராக திகழ்ந்தவர் நாஞ்சில் சம்பத்.
பின்னர் இவருக்கும் மதிமுக கட்சியின் தலைவர் வைகோவிற்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அதனை தொடர்ந்து அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளராக பதவி வகித்து வந்த நாஞ்சில் சம்பத்தை 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிமுகவில் இருந்து திடீரென நீக்கப்பட்டார்.
அதன் பின்னர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இவர் டிடிவி தினகரன் தனி கட்சி தொடங்கிய போது அந்த கட்சியின் பெயரில் திராவிடம் மற்றும் அண்ணா என்ற பெயரில் இடம் பெறவில்லை என்றும் திராவிடத்தையும் அண்ணாவையும் அவமதித்த கட்சியில் நான் இருக்க மாட்டேன் என்றும் அங்கிருந்து விலகினார். பின்னர் அரசியலில் இருந்தே விலகுவதாகவும் தெரிவித்திரகுந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் திமுக நடத்திய அறிவு திருவிழாவில் தன்னை அழைக்கவில்லை என்று தனது அதிருப்தியை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும் அதே பேட்டியில் தனது குடும்ப பின்னணியை சொல்வதன் மூலம் திமுகவுடன் தனது ஆழமான தொடர்பை வெளிப்படுத்தி ஆனால் திமுக தான் கடந்த சில வருடங்களாக தன்னை புறக்கணித்து வருகிறது என்ற வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் தன்னை விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுக, திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் நட்சித்திர பேச்சளராக திகழ்ந்த நாஞ்சில் சம்பத் தவெக-வில் இணைந்திருப்பது தமிழக வெற்றி கழகத்திற்கு பலம் சேர்க்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மேலும் இது குறித்து நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய்யின் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி நமதே!” என பதிவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.