தமிழ்நாடு

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க தி.மு.க. அரசு பாடுபடும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மொழியாக்க தி.மு.க. அரசு பாடுபடும் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

Malaimurasu Seithigal TV

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மொழி-இன போராட்ட சாதனைகளில் ஒன்று, தமிழ் மொழிக்கு ஒன்றிய அரசின் செம்மொழி தகுதி கிடைக்க செய்ததாகும் என குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி தகுதிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க தி.மு.க. அரசு தொடர்ந்து உழைத்திடும் என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி-அலுவல் மொழியாகிட தி.மு.க. உறுதியுடன் பாடுபடும் என தெரிவித்துள்ளார்.