தமிழகத்தின் அரசியல் களம் நாளுக்கு நாள் புதுப்புது பரிணாமத்தை அடைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதற்கிடையேதான் மாநிலம் முழுக்க எஸ்.ஐ.ஆர் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. மேலும் இதிலும் பல குளறுபடிகள் உள்ளன.
அதிமுக - பாஜக
தமிழகம் முழுவதுமே எஸ்.ஐ.ஆர் -ஐ ஆதரிக்காத இரண்டே பேர் பாஜக -வும் அதிமுக -வும்தான். எங்கே விஜய் -உடன் அதிமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தான் பாஜக-அதிமுக கூட்டணி 8 மாதங்களுக்கு முன்பே உருவானது. மேலும் கூட்டணி அமைக்கப்பட்ட ஆரம்ப காலங்களில், எடப்பாடியை கூட்டணியின் தலைவர் எனவோ, அதிமுக தலைமையில்தான் ஆட்சியையும் அமையும் எனவோ உத்தரவாதமிக்க பேச்சுக்கள் எழாததால், கள அளவில் இந்த கூட்டணி இணையவே இல்லை. அதனால்தான் திமுக துவங்கி அனைவரும் ‘பொருந்தா கூட்டணி’ என விமர்சித்து வருகின்றனர்.
என்ன முரண்கள் இருந்தாலும், ஒரு எதிர்க் கட்சியாக ஆளுங்கட்சியில் உள்ள சிக்கல்களை சாடவேண்டியது இவர்களின் கடமை என்றாலும், அதிமுகவை விட பாஜக அதை சிறப்பாக செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் பாஜக தமிழக அரசை கடுமையாக சாடி வருகிறது. மேலும் மாநிலத்தில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், எதிர்க்கட்சியான அதிமுகவை காட்டிலும் பாஜக பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் அதிமுக பாஜக கூட்டணிதான் ஆட்சியை அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தும் வருகின்றனர்.
தமிழகத்தில் மதுரை - கோவை பகுதியில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் துவங்குவதாக இருந்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதலை மறுத்திருக்கிறது. இதனால் பாஜக -விற்கு மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி திமுக சார்பில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு பதிலளிக்க செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
“தமிழகத்தில் கொலைகளும், போதைப் பொருள் கடத்தல்களும், பாலியல் குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் 17% குற்றங்கள் அதிகரித்துள்ளன. நேற்றுகூட பஞ்சாங்கம் பார்த்தேன், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் தான் ஆட்சிக்கு வருவார்கள் என போடப்பட்டுள்ளது. மக்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியில் உள்ளனர். என பதிவு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவை - மதுரை மெட்ரோ நிலைய திட்ட அறிக்கையை திருத்தி வழங்குமாறே கோரப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு திட்டத்தை, நிராகரிக்கவில்லை. ஒப்புதல் பெறக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு வரைவு அறிக்கையை செய்துகொடுத்துள்ளனர். இதை நான் பகிரங்க குற்றச்சாட்டாகவே வைக்கிறேன்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.