vijay tvk and mk stalin dmk  
தமிழ்நாடு

தவெக ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறும் செய்யாது.. அதிமுகவின் பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்டாலின்!

மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதில் திமுகவிற்கு விருப்பமில்லை...

Mahalakshmi Somasundaram

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்சி அமைக்க இன்னும் 11 MLA -க்களின் ஆதரவு தவெக விற்கு தேவைப்படும் நிலையில் நேற்று காங்கிரஸ் சில நிபந்தனைகளுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே தற்போது 5 MLA க்களின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில் மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க தங்களுக்கு ஆதரவு அளிக்க கோரி கம்யூனிஸ்ட் மற்றும் விசிக போன்ற இடது சாரி கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள அதிமுக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதை தடுக்க, திமுக ஆதரவுடன் ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நேற்று தகவல்கள் வெளியாகி இருந்தன. எனவே திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது திமுகவில் இருந்து அதை மறுக்கும் வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க திமுக எந்த இடையூறு செய்து என கூறியுள்ளார். மேலும் உடனே மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதில் திமுகவிற்கு விருப்பமில்லை எனவும், தவெக ஆட்சியமைத்து 6 மாதம் என்ன செய்கிறது என்பதை திமுக உற்று கவனிக்கும் எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மகளிருக்கு மாதம் தோறும் 2500 ரூபாய் கொடுப்பது என்பது மிகவும் கடினம், ஆனால் திமுக திட்டங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும், மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகையையும், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை நிறுத்தாமல் தொடர வேண்டும் எனவும் கூறியுள்ளார். எனவே இதன் மூலம் அதிமுக திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.