தமிழ்நாடு

திமுகவின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்...தொடங்கி வைத்த முதலமைச்சர்!

Malaimurasu Seithigal TV

திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை: கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், முதலமைச்சரால் இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த இணையத்தில், திராவிட இயக்கத்தின்  வரலாறு, திமுக ஆட்சி கால சாதனைகள், அரிய புகைப்படங்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்ற விஷயங்கள் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இணையத்தை http://dmk.in லிங்கின் மூலம் மக்கள் காணலாம்.