தமிழ்நாடு

தேர்வுக்கு இடக்குழப்பத்தால் தாதமதாக சென்ற டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்...!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், இடக்குழப்பத்தால் தாதமதாக சென்ற டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் மாவட்ட ஆட்சியர் தலையீட்டுக்குப் பின் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர். 

Tamil Selvi Selvakumar

இன்று டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், திண்டிவனம் சாணக்யா பள்ளியில் 18 பேர் குரூப் 2 தேர்வெழுதச் சென்றனர். ஹால் டிக்கெட் சரிபார்த்தலின் போதுதான், அவர்கள் செஞ்சி சாணக்யா பள்ளியில் தேர்வெழுத வேண்டியவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து உடனடியாக 18 பேரும் காலை ஒன்பது இருபது மணிக்கு செஞ்சி சாணக்யா பள்ளிக்கு விரைந்தனர். தேர்வு ஒன்பது முப்பது மணிக்கு தொடங்கினாலும், ஒன்பது மணிக்கே தேர்வு மையத்திற்குள் வர வேண்டும் எனக் கூறி, தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. தொடர்ந்து தேர்வர்கள் சூழலை விளக்கியும், தேர்வெழுத அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் தலையீட்டு பேசிய பின் அவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.