நீதிக்கட்சியின் மூத்த தலைவர் டாக்டர் நடேசனார் நினைவு நாளையொட்டி, தி.நகர் நடேசன் பூங்காவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூகநீதிக்கு வித்திட்டவர் நடேசனார் என்றும், தான் மருத்துவத்துறையில் சம்பாதித்த பணம் அனைத்தையும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக செலவு செய்ததாகவும் குறிப்பிட்டார்.
கேரளாவிற்கு அடுத்து தமிழகத்தில் அதிக பட்டதாரிகள் உருவாவதற்கு காரணமாக இருந்தவர்கள் சமூக நீதித் தலைவர்கள் என கூறிய அவர், தமிழகத்தில் நீட் முழுவதுமாக அகற்றப்பட அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.