தமிழ்நாடு

இ-மெயிலில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம்... தமிழக ஆளுநர் மாளிகை எச்சரிக்கை...

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியில் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என ஆளுநர் மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Malaimurasu Seithigal TV

சில விஷமிகள், ஆளுநரின் பெயரில் போலியாக சில மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி, ஆட்சேபனைக்குரிய தகவல்களுடன் மின்னஞ்சல்களை அனுப்புவது குறித்து சமீபத்தில் தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஆளுநர் மாளிகைக்கு govtam@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியும், @rajbhavan_tn என்ற டுவிட்டர் கணக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமானவை என்றும்,  மற்ற போலி மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் போலி டுவிட்டர் கணக்குகளில் பரப்பப்படும் செய்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.