AI generated image 
தமிழ்நாடு

“எதிர்க்கட்சிகளின் ட்ராப்-ல் சிக்காதீர்கள்.. யாராவது தடுத்தால் என்னிடம் சொல்லுங்கள்!” – தவெக MLA-களுக்கு.. முதல்வர் விஜய் அட்வைஸ்!

நமக்கு நிறைய எதிரிகள் உள்ளதால்.. எந்த ட்ராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை

Muthu Lakshmi

தமிழக அரசியல் களத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக MLA-களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஆலோசனை கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்துவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். MLA கனிமொழி, தாஹிரா, சிந்து, காமாட்சி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பெண் எம்எல்ஏக்கள் இந்தச் சந்திப்பில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேசிய முதல்வர் விஜய், நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், ஆறு மாத ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில், தொடர்ந்து மக்கள் சேவையில் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சில சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு ஆளாகும் வகையில் செயல்படக் கூடாது என எச்சரித்துள்ள விஜய், "நம் கூட்டணியில் உள்ளவர்களை விட நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளனர். நமக்கு நிறைய எதிரிகள் உள்ளதால்.. எந்த ட்ராப்பிலும் சிக்காமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்" எனக் கூறியுள்ளார். தொடர்ந்து, அரசு கொண்டுவரும் மக்கள் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார் விஜய்.

மேலும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் விவகாரத்தில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாகவும் முதலமைச்சர் விஜய் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “உங்கள் தொகுதியில் நீங்கள் செய்யக்கூடிய பணி தான் அடுத்த தேர்தலில் உங்களை வேட்பாளராக நிற்க வைக்கும். உங்கள் தொகுதியில் அல்லது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கட்சி ரீதியாக ஏதாவது பிரச்சனை இருந்தாலோ உடனடியாக என்னை நேரில் வந்து சந்திக்கலாம். அதற்குதான் நான் இங்கு முதலமைச்சராக அமர்ந்து உள்ளேன். என்னை நேரில் சந்திக்க யாராவது தடுத்தாலும் அது குறித்தும் என்னிடம் சொல்லுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு விஜய் வழங்கியுள்ள அறிவுரைகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.