தமிழ்நாடு

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம்…   

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று சின்னமனூரில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்  நடைபெற்றது.

Malaimurasu Seithigal TV

தேனி மாவட்டம் சின்னமனூரில்  பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு  நடைபெற்றது இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் நான்கு வகையான மாடுகளுக்கு தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டது.

சின்னமனூரில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில்,  மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து சுமார் 120 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.      இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், நாட்டு மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு,புள்ளி மான் என நான்கு வகையான மாடு வகைகளை கொண்டு,  4 பிரிவாக தனித்தனியாக நடைபெற்றது. 

இதில் நாட்டுமாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக  12,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 10,000 ரூபாயும், மூன்றாம் பரிசாக 8,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. பூஞ்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 8,000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 7000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 6000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

தேன்சிட்டு மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 7000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 5000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 4000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது.  அதே போல் புள்ளி மான் மாடு வகை பிரிவில் கலந்துகொண்டு வெற்றி பெறும் நபர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும், இரண்டாம் பரிசாக 3000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 2500 ரூபாயும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மூன்று வகையான மாட்டுப் பந்தய போட்டிகளிலும் கலந்து கொண்டு நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை பெறும் நபர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி பந்தயமானது பொது மக்களின் ஆரவாரத்துடனும் ஏராளமானோர் கண்டுகளித்தனர் மேலும்  போலீசாரின் பாதுகாப்புடனும் இந்தஇரட்டை மாட்டு வண்டி  பந்தயம்  நடைபெற்றது.