தமிழ்நாடு

தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம்...ஹெச்.ராஜா பேட்டி!

Tamil Selvi Selvakumar

தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம் என ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழின் பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பாஜக:

கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழை வெறும் பேசு மொழியாக மட்டுமே திமுக மாற்றியுள்ளதாகவும், தமிழின் பெருமையை உணர்ந்து செயல்படும் கட்சி பாஜக மட்டுமே என தெரிவித்துள்ளார்.

ஏன் சமச்சீர் கல்விக்கூடம் நடத்தவில்லை?:

தொடர்ந்து பேசிய அவர், திமுக நிர்வாகிகள் அனைவரும் சி.பி.எஸ்.சி கல்விக் கூடம் நடத்தி வரும் நிலையில்,
ஏன் சமச்சீர் கல்விக்கூடம் நடத்தவில்லை? எனவும், தன் பிள்ளைகளை இந்தி படிக்க வைக்கும் திமுகவின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டால் அவர்கள் முகத்தை எங்கே வைப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

வெறுப்பு அரசியலை நடத்துவது தான் திராவிட மாடல்:

மேலும், வெறுப்பு அரசியலை நடத்துவது தான் திராவிட மாடல் என்றும், தமிழ் உணர்வை அழிக்க பயன்படுத்தும் சொல் தான் திராவிடம் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் ஹெச். ராஜா விமர்ச்சித்துள்ளார்.