ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியின்போது பயணிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதை தவிர்த்து மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டுமென போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரைகள் வழங்கி போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள :"மருத்துவர்களின் வருகையை கண்காணிக்க பறக்கும்படை ...” சுகாதார துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
மாநகரப் போக்குவரத்து கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கால அட்டவணையின் படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தட பகுதிகளில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும் என ஆணையிட்டுள்ளது.அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கண்டிப்பாக பேருந்தை நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி , இறக்கி செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளது.அதுமட்டுமில்லாமல் நிர்ணயிக்கப்பட்ட சரியான பயண கட்டணங்களை பயணிகளிடம் உரிய பயண சீட்டு அளித்து வசூலிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிக்கை விடுத்துள்ளது.
மேலும் தெரிந்து கொள்ள:வன ஆய்வாளர் பழகுனருக்கான தேர்வில் மாற்றத்தை அறிவித்த டி.என்.பி.எஸ்.சி....என்ன மாற்றம்?!!!
பேருந்துகளில் உள்ள பழுதுகளை முறையாக சரி செய்து வழித்தடத்தில் கால அட்டவணையின் படி பேருந்துகளை முறையாக இயக்கிட வேண்டும் என்பது போக்குவரத்துத்துறையின் வேண்டுகோளாக உள்ளது.பேருந்தினை மிக கவனத்துடன் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்புடன் இயக்க வேண்டுமெனவும் ,பேருந்து இயக்கத்தினை செம்மைப்படுத்தி இயக்குவதன் மூலம் பயண சீட்டு வருவாய் மற்றும் இதர வருவாய்களை பெருக்கிட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.