தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்கள் இப்படி தான் இருக்கும்...சென்னை வானிலை மையம் தந்த அப்டேட்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், 14.02.2023 முதல் 16.02.2023 வரையிலான தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.