தமிழ்நாடு

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை தான்...வானிலை மையம் சொன்ன தகவல்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23 ஆம் தேதி வரை பொதுவாக  வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையானது  22 டிகிரி செல்சியஸ் முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.