தமிழ்நாடு

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு...தடையை மீறி பரிசலை இயக்கும் பரிசல் ஓட்டிகள்!

Tamil Selvi Selvakumar

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது...

தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகள், வன பகுதிகள் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஐந்தருவி, சீனி பால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட பிரதான அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.   

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால்,  சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும் மாவட்ட நிர்வாகம் விதித்த தடை தொடர்ந்து 21வது நாளாக நீடிக்கிறது. இருப்பினும் தடையை மீறி பரிசல் ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பரிசல் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்...