நீலகிரியில், கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில், இருவயல் பகுதியில் உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததால், அவதியடைந்த மக்கள், ஆற்றை தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.