தமிழ்நாடு

'உள்ளே' ஓ.பி.எஸ்.சிடம் விசாரணை.. 'வெளியே' ஆதரவாளர்களுக்கு சுடசுட சாம்பார் சாதம்..!

ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடைபெற்றபோது அவருக்காக வெளியே காத்திருந்த தொண்டர்களுக்கு சுட சுட சாம்பர் சாதம் வழங்கப்பட்டது.

Tamil Selvi Selvakumar

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒ.பன்னீர்செல்வம் 2-வது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஆணையத்தில் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏராளமான அதிமுகவினர் வெளியே கூடியிருந்தனர்.

அது மதிய வேலை என்பதால் உடனடியாக ஒட்டலில் இருந்து சுட சுட சாம்பர் சாதம் வரவழைக்கப்பட்டு தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால், தொண்டர்கள் பசியாறி, ஓ.பன்னீர் செல்வம் வருகைக்காக காத்திருந்தனர்.