இ-சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கும் தகுதியானோருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி-பதில் நேரத்தில் பாடி ஒன்றியம் சலமாநத்தம் ஊராட்சியில் இ-சேவை மையம் அமைக்கப்படுமா என ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல். ஈஸ்வரப்பன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், 234 சம உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மையம் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இ- சேவை மையங்களில் 235 அரசு சேவைகள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில், மேலும் 600 அரசின் திட்டங்கள் இ - சேவை மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். மேலும் இ சேவை மையம் அமைக்க விண்ணப்பிக்கும் தகுதியானோருக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.