தமிழ்நாடு

ஈஸ்டர் திருநாள் - முதலமைச்சர் வாழ்த்து...!

Tamil Selvi Selvakumar

அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை மேலோங்க ஈஸ்டர் திருநாளில் உறுதி ஏற்போம்  என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து  தெரிவித்துள்ளார். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3ஆவது நாள் உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி திரளான கிறிஸ்தவர்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு நன்னாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பு, சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை மேலோங்க ஈஸ்டர் திருநாளில் உறுதி ஏற்போம்; உலக மக்களின் நலனுக்கான நற்கருத்துகளைப் போதித்த இயேசு பெருமானின் அடியொற்றி நடக்கும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.