தமிழ்நாடு

 "அதிமுகவின் திட்டங்களை முடக்கும் திமுக அரசு", எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி பேச்சு!

Malaimurasu Seithigal TV

சேலத்தில் நடைபெற்ற விழாவில், கலந்துகொண்ட எதிர்க்கட்சி தலைவர் பழனிச்சாமி, செந்தில் பாலாஜி கொள்ளையடித்த பணத்தில், முதலமைச்சருக்கு பங்கு சென்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் , எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திட்ட பணிகளை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி அதிமுக-வில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, ஊழல் செய்ததாக குற்றம் சாட்டிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், தற்போது  அதே செந்தில் பாலாஜியை மத்திய அரசு பழி வாங்குவதாக கூறுகிறார், என பேசியுள்ளார்.

மேலும் பேசிய அவர், மூத்த அமைச்சர் துரைமுருகனை மருத்துவமனைக்கு சென்று பார்க்காத முதலமைச்சர், செந்தில் பாலாஜியை மட்டும் பார்க்க ஓடுவதாக, சாடியுள்ளார்.

மேலும், செந்தில் பாலாஜி 20000 கோடி கொள்ளையடித்திருப்பதாகவும், கொள்ளை அடித்த பணத்தில் பெரும் பகுதி முதலமைச்சருக்கு சென்று உள்ளதாகவும், குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.