தமிழ்நாடு

திமுகவின் தேர்தல் வெற்றி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!!

Malaimurasu Seithigal TV

உள்ளாட்சித் தேர்தலில் அராஜகத்தையும், பணத்தையும் வைத்து முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அதிமுக பொன்விழா ஆண்டு கொண்டாடுவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதாகவும், ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் பணம் கொடுத்து பெருமளவு முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும், இதுபோன்ற முறைகேடு மூலம் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்கு எப்படி சேவை செய்வார்கள் என்றும் வினவினார்.