தமிழ்நாடு

இனி எந்த தேர்தல் வந்தாலும்...அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி...! கடம்பூர் ராஜூ பேட்டி

Tamil Selvi Selvakumar

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி புதிய எழுச்சியோடு செயல்படுவார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஒற்றை தலைமை வேண்டும் என்ற அனைத்து தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரித்துள்ளதால் தமிழ்நாட்டில் இனி எந்த தேர்தல் வந்தாலும் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெறுவார் என்றும், அவர் புதிய எழுச்சியுடன் செயல்படுவார் என்றும் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.