தமிழ்நாடு

ஆட்சி எப்படி நடத்த கூடாது என்பதற்கு உதாரணம் எடப்பாடி- போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சு

பேரா. அன்பழகனின் நூற்றாண்டு விழாவில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் எதிர்கட்சி தலைவரை விமர்சனம் செய்தார் அப்போது ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஆட்சியே சாட்சி.

Malaimurasu Seithigal TV

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு

அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் அரியலூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பேசினார்.

தமிழகத்தை சுருட்டி வளைத்து விடலாம்

அப்போது அவர்கூறும்போது உதயநிதி அமைச்சரானது குறித்து சசிகலாவும், தினகரனும் பேசுவது ஏனென்றால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி, அதன்மூலமாக ஆட்சியை கைப்பற்றி, தமிழகத்தை சுருட்டி வளைத்து விடலாம் என நினைத்தார்கள் அது நடக்கவில்லை என்பதால் அந்த வெறுப்பில் பேசுகிறார்கள் என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக பேசியபோது  ஒரு ஆட்சி எப்படி நடத்த கூடாது என உதாரணமாக நடத்தி காட்டியவர் தான் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.

உங்க சீட்ட கண்டுபுடிங்க

மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சொல்லி கொள்ள விரும்புவதெல்லாம் முதலில் உங்க சீட்ட கண்டுபுடிங்க, உன் சீட்ட உருவிட்டான் என்றும் விமர்சனம் செய்தார். மேலும் எங்கள் மாநில இளைஞரணி செயலாளர் (உதயநிதி ஸ்டாலின்) சொன்னது போலதான் உங்களது விமர்சனங்களுக்கு அவர், அவருடைய செயல்பாட்டின் மூலம்  பதில் சொல்லுவார், காந்திருங்கள் காலம் இன்னும் உங்களுக்கு பல அதிர்ச்சிகளை தர காத்திருக்கிறது என்று கூறினார்.