தமிழ்நாடு

சூப்பரா பாடம் நடத்துனா விருது கன்ஃபார்ம்... பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Malaimurasu Seithigal TV

தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் பயனடையும் வகையில், பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அவை அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பள்ளி மாணவர்களின் வீட்டிற்கு சென்று மாணவர்கள் ஆர்வமுடன் கல்வி தொலைக்காட்சியை பார்க்கிறார்களா என்றும், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு புரியும் படி பாடம் நடத்துகிறார்கள் எனவும் தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் SC/ST மாணவர்களை அதிகளவில் சேர்க்கும் தலைமை ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், கல்வித் தொலைக்காட்சியில் சிறந்த முறையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் எனவும் ஆணையர் நந்தக்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத சூழலில், அரசுப்பள்ளியை நாடி வரும் மாணவர்களுக்கு சேர்க்கையை மறுக்கக் கூடாது என கூறியுள்ள அவர், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.