தமிழ்நாடு

மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

Tamil Selvi Selvakumar

அரியலூர் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்று பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவி தற்கொலை விவகாரத்தில்  தொடர்டபுடையவர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.  மேலும், மாணவி தற்கொலை தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருதாகவும் பள்ளிகளில் சாதி, மதம், அரசியல் ரீதியான பாகுபாடுகள் இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் எச்சரித்தார்.

இதனைத்தொடர்ந்து பொதுத்தேர்வு குறித்து பேசிய அன்பில் மகேஷ், 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் இதற்கான  ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்  அன்பில் மகேஷ் தெரிவித்தார்.