தமிழ்நாடு

”கல்வித்துறை மூலம் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியவர் கருணாநிதி” உதயநிதி பெருமிதம்!

Tamil Selvi Selvakumar

கல்வித்துறையை உயர்த்தி அதன்மூலம் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியவர் கருணாநிதி என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொிவித்துள்ளாா். 


சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள புதிய கல்லூரியில் நடைபெற்ற மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாணவ, மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை கலைஞர் பல துறைகளில் உயர்த்தியுள்ளார். அதில் முக்கியமானது கல்வித்துறை.  தமிழ்நாட்டில் இன்றுவரை 750-க்கும்  மேற்பட்ட  மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளதாக தொிவித்தாா். மேலும், கல்வித்துறையை உயர்த்தி அதன்மூலம் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.