தமிழ்நாடு

பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்..! தீர்வு கிடைக்குமா?

Malaimurasu Seithigal TV

ஏகனாபுரம் கிராம பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பரந்தூர் விமான நிலையம்:

சென்னையின் புதிய 2வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளது. இதையடுத்து புதிய விமான நிலையதிற்காக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராம பகுதிகளில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. 

எதிர்ப்பு:

இந்த விமான நிலையத்தால் 3000 ஏக்கர் விலை நிலங்கள், 1000 குடியிருப்புகள் அளிக்கப்படும் என, விமான நிலையம் குறித்த அறிவிப்பு  வெளியான நாளில் இருந்து விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

கவன ஈர்ப்பு போராட்டம்:

இதன் ஒரு பகுதியாக 63வது நாளான நேற்று கிராம மக்கள் இரவு நேர கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனார். இதில் பெண்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் கலந்துகொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, தங்களது ஊரை விட்டு வெளியேற மாட்டோம் என கூறி பெண்கள் ஒப்பாரி வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.