தமிழ்நாடு

எழும்பூர் அடுக்குமாடி குடியிருப்பு குறித்து கேள்வியெழுப்பிய உறுப்பினர்...பதிலளித்த அமைச்சர்!

Tamil Selvi Selvakumar

எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி வீடுகளுக்கான பணிகள் 2 மாதங்களில் முடிவடையும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகர் பகுதியில் 560 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும், பயனாளிகளுக்கு எப்போது ஒப்படைக்கப்படும் எனவும் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சந்தோஷ் நகர் பகுதியில் ஏற்கனவே இருந்த 278 குடியிருப்புகளை இடித்துவிட்டு, புதிதாக 72 கோடியே 51 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 560 அடுக்குமாடி வீடுகளுக்கான பணிகள் இன்னும் 2 மாதங்களில் முடிவடையும். அதன்பின்பு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.