தமிழ்நாடு

”தொண்டர்களே இல்லாமல் போய்விடுவார்கள்” ஜேசிடி பிரபாகரனை எச்சரித்த இளங்கோவன்!!!

Malaimurasu Seithigal TV

உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஓபிஎஸ்யை வரவேற்க  காமராஜர் சாலையில் தொண்டர்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர்.  அவர்களை ஒருங்கிணைக்க ஓபிஎஸ் தரப்பில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் கேஜி இளங்கோவன் என்பவர் நியமக்கப்பட்டார்.

இந்நிலையில் ஓபிஎஸ் சார்பில் நியமிக்கப்பட்ட  தென் சென்னை மாவட்ட செயலாளர் சதீஷ் என்பவர் கே ஜி இளங்கோவன் சார்பில் சாலையில் நிற்பவர்களை உள்ளே போக சொல்லுங்கள் என காவல்துறையினரிடம் புகார் தெரிவித்ததாகவும் நாங்கள் சாலையில் நிற்போம் உங்களுக்கு என்ன நீங்கள் எப்படி எங்களை உள்ளே போக சொல்லி சொல்லலாம் என சண்டை ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகியான கே ஜி இளங்கோவன் ஜேசிடி பிரபாகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.  அதற்கு ”என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  இப்படியே செய்தீர்கள் என்றால் ஓபிஎஸ்-க்கு தொண்டர்களே இருக்க மாட்டார்கள்.” என எச்சரிக்கும் தொனியில் ஜேசிடி பிரபாகரனை மிரட்டும் விதமாக பேசியுள்ளார் இளங்கோவன்.