தமிழ்நாடு

செப்டம்பர் வரை 356 பேர் உயிரிழப்பு - மின்சார வாரியம் தகவல்!

Malaimurasu Seithigal TV

2023-ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 356 மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

மின்சார தாக்குதலால் அவ்வப்போது எதிர்பாராத விதமாக உயிரிழப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை 576 மனிதர்களும், 253 விலங்குகளும் விபத்தில் சிக்கியதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில், மின்சாரத்தால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.