தமிழ்நாடு

இம்மானுவேல் நினைவுநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் - சீனிவாசன் கோரிக்கை!

Tamil Selvi Selvakumar

சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும் என பாஜக மாநில பொதுசெயலாளர் சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி:

சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் 65 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பழனியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேராசிரியர் சீனிவாசன் கோரிக்கை:

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.