தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வங்கிக் கடன் மேளா - தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதரத்தை மேம்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் வங்கிக்கடன் மேளா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Suaif Arsath

மத்திய மாநில அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாற்றுத்திறனாளி களுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வங்கிக் கடன் மற்றும் சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் நோக்கில், வங்கிக் கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பிரதமரின் வேலைவாய்ப்புத்திட்டம், சிறு தொழில் மற்றும் பெட்டிக்கடை தொடங்குவதற்கான வங்கிக்கடன், மாற்றுத்திறனா ளிகள் சுய தொழில் புரிவதை ஊக்குவித்தல் ஆகியவைகளுக்கு வங்கிக்கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.