தமிழ்நாடு

அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்காதது ஏன்? ஜெயக்குமார் கேள்வி

Tamil Selvi Selvakumar

விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

சென்னை ராயபுரத்தில் மதுரை எழுச்சி மாநாடு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அமைச்சர் பொன்முடியிடம் இருந்து அமலாக்கத்துறையினர் கைப்பற்றிய பணம், ஆவணங்கள் மிக குறைவானது என விமர்சித்த அவர், எப்பொழுது கைதாவோம் என்ற பயம் பொன்முடிக்கு அதிகம் உள்ளதால் அவர் தூக்கமில்லாமல் இருப்பதாக கிண்டலடித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதை பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை என குற்றம்சாட்டினார். செந்தில்பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், ஆனால் அமைச்சரவையில் இருந்து ஏன் நீக்கப்படவில்லை எனவும், வீட்டில் இருப்பது போன்ற வசதிகள் வழங்கப்படுவது ஏன் எனவும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.