தமிழ்நாடு

சட்டமன்ற கூட்டத் தொடர் குறித்து...ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை!

Tamil Selvi Selvakumar

எம்.ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன் அ.தி.மு.க. பொன் விழா ஆண்டை நிறைவு செய்துள்ளதாக, அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 

விழா கோலம் பூண்ட கட்சி அலுவலகம்:

அ.தி.மு.க.வின் பொன்விழா நிறைவை ஒட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகம் விழா கோலம் பூண்டுள்ளது. கட்சி அலுவலகத்திற்கு வந்த இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கும்ப ஆரத்தி மற்றும் கிராமிய நடனங்களால் சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

எம்.ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதா நல்லாசியுடன் நிறைவு:

எடப்பாடி பழனிச்சாமி, எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நல்லாசியுடன் அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 51-வது ஆண்டை தொடங்கியுள்ளது என்றும், இந்த நாள் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் கூறினார். 

ஈபிஎஸ் ஆலோசனை:

தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது குறித்து, ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஈ.பி.எஸ்  ஆலோசனை மேற்கொண்டார்.