தமிழ்நாடு

விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை - உதயநிதி

Malaimurasu Seithigal TV

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வு பிரிவின் குடிமைப் பணியின் முதல் நிலை தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, விடுபட்ட மகளிர் அனைவருக்கும் நிச்சயம் உரிமைத்தொகை கிடைக்கும் என கூறினார். மேலும், மகளிர் உரிமைத் தொகை விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாகவும் சாடினார்.