தமிழ்நாடு

ஏழைகளின் உயிரோடு விளையாடுவதா? திமுகவை விளாசிய எடப்பாடி!

Tamil Selvi Selvakumar

ஏழைகளின் உயிரோடு விளையாடுவதை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளை நம்பி உள்ள அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதை திமுக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் ஏழை குழந்தைகளின் உயிரோடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளையாடுவதாக தெரிவித்துள்ளார்.

கால்பந்து வீராங்கனை மற்றும் காவலர் மகளுக்கு தவறான சிகிச்சை, சளி தொல்லைக்கு வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி செலுத்துவது, தற்போது குழந்தைக்கு தவறான சிகிச்சை என பல்வேறு அவலங்கள் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, ஒரு கையை இழந்த குழந்தைக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதுடன், தவறிழைத்த மருத்துவ பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.