தமிழ்நாடு

இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக பெரிய தோல்வி...ஈபிஎஸ்சை குற்றம் சாட்டும் டிடிவி!

Tamil Selvi Selvakumar

இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக இவ்வளவு  பெரிய தோல்வி அடைந்ததற்கு ஈபிஎஸ் தலைமையே காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்  காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேசமயம், எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு வேட்பாளரை அறிவித்து வெற்றி பெறுவோம் என்று உறுதி பூண்டது. ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக குறைவான வாக்குகள் பெற்று பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. 

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியுற்றது குறித்து விமர்சனம் செய்தார். இரட்டை இலை சின்னம் இருந்தும் அதிமுக இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்ததற்கு ஈபிஎஸ் தலைமையே காரணம் என்று கடுமையாக ஈபிஎஸ்சை சாடினார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆட்சி மற்றும் பணத்தின் மூலமே திமுக வெற்றி பெற்றுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.