தமிழ்நாடு

இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒலிப்பெருக்கிகளை கொண்டு முழக்கங்களை எழுப்பி வாக்குவாதம்..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒலிப்பெருக்கியை வைத்தும் ஆராவாரம் செய்தும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர்கள் எதிரெதிரே நின்று முழக்கங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tamil Selvi Selvakumar

ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான சர்ச்சையால், அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். இபிஎஸ் தீர்மானக் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், ஓபிஎஸ்-க்கு மாவட்ட செயலாளர்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருவதாக தெரிகிறது. இதற்கிடையே ஒரே இடத்தில் இபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கைதட்டியும் ஒலிப்பெருக்கியில் ஆராவாரம் செய்தும் முழக்கங்களை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் நின்று கொண்டு ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் அரங்கேறியது. இந்நிலையில் தலைமை பொறுப்பில் யார் வகித்தாலும் கட்சி ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென பல தொண்டர்கள் பேட்டியளித்துள்ளனர்.