தமிழ்நாடு

பட்டாசு விபத்து நிவாரணத் தொகையை உயர்த்த இ.பி.எஸ் கோரிக்கை!

Malaimurasu Seithigal TV

ஒசூர் மற்றும் அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை 10 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் 2-ம் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதுபோன்ற இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டு, தீயணைப்புத் துறையினரை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றார். வலியுறுத்தினார். ஓசூர் மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3 லட்சம் ரூபாய் நிதி உதவியை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படாததன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினார். மேலும், பட்டாசு தொழிற்சாலைகளில் தொழிலக பாதுகாப்பு இயக்கம் மூலம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.