தமிழ்நாடு

"திமுக கட்சி அல்ல காா்ப்பரேட் கம்பெனி" எடப்பாடி பழனிச்சாமி!

Malaimurasu Seithigal TV

திமுக கட்சி அல்ல காா்ப்பரேட் கம்பெனி என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி விமா்சித்துள்ளாா். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஒரு குடும்ப கட்சி எனவும், திமுக கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி எனவும் விமா்சித்துள்ளாா். 

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுகவினர் அடிக்கல் நாட்டியும், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும் வருவதாக கூறிய அவா் தற்போதையை திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினாா். 

தொடா்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, எங்களை பாா்த்து பாஜகவின் பி டீம் எனக்கூறி வரும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியில் யார்? பிரதமர் என்று அறிவிக்க வேண்டும் என்றாா்.

மேலும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்து விட்டதாகவும், கொலை கொள்ளை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.