தமிழ்நாடு

இபிஎஸ்ஸை கட்சியை விட்டு விலக்க வேண்டும்....!!!

Malaimurasu Seithigal TV

எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக அதிமுக பொதுச்செயலாளா் ஆக முடியாது என ஓபிஎஸ் ஆதரவாளா் வைத்திலிங்கம் தொிவித்துள்ளாா். 

தஞ்சாவூாில் ஓ.பன்னீர்செல்வம் அணியினாின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியை விட்டு விலக்க வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதைத் தொடா்ந்து வைத்திலிங்கம் செய்தியாளா்களை சந்தித்து பேசினார்.  அப்போது, திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என சாடிய அவா், எடப்பாடி பழனிச்சாமி நிச்சயமாக அதிமுக பொதுச்செயலாளா் ஆக முடியாது என தொிவித்துள்ளாா்.