தமிழ்நாடு

ஈரோடு தொகுதி....அதிகாரப்பூர்வமாக வேட்பாளர் அறிவிப்பு....காங்கிரஸின் திடீர் மாற்றம்...

Malaimurasu Seithigal TV

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. 

மீண்டும் கூட்டணிக்கு..:

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவரது மகன் திருமகன் ஈவெரோ அண்மையில் உயிரிழந்த நிலையில் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரசுக்கு கட்சிக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக ஒதுக்கியது.

கோரிக்கை:

இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்த ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், அவரது  இரண்டாவது மகனுக்கு வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.  கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து சென்னை, சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக  ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போட்டியிடுவார் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். 

ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் குறித்து:

1985 ஆம் ஆண்டில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக ஈவிகே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அதன் பின்னர் மத்திய அமைச்சர், தமிழக காங்கிரஸ் தலைவர் என பொறுப்பு வகித்த ஈ.வி.கே. எஸ். இளங்கோவன், 35 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.

வழக்கத்திற்கு மாறாக:
 
வழக்கமாக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் காங்கிரஸ், தற்போது இடைத்தேர்தலில் முன்கூட்டியே அறிவித்தது குறிப்பிடதக்கது.

-நப்பசலையார்