Erode dog bite news 
தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் பழி - பாதுகாப்பு முறைகள் மற்றும் இழப்பீடு அறிவிப்பு

ஈரோடு மாவட்ட பகுதியில் மட்டும் இதுவரை சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறிநாய்களால் கடித்துக் கொல்லப்பட்டு இருப்பதாகவும் இதற்கான இழப்பீடு வழங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Anbarasan

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை, சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட ஆடுகள் வெறி நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டு இருக்கின்றன.

கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆடு வளர்ப்பு தொழில் மிகப் பெரிய அளவில் பங்காற்றி வருகிறது.

இந்த பகுதியில் ஒவ்வொரு தோட்டத்திலும் 20 முதல் 50 ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.

இந்த நிலையில்1 அங்குள்ள வெறிநாய்கள் ஆடுகளை தொடர்ந்து கடித்துக் கொல்வது தொடர் நிகழ்வாகி வருகிறது.

இது குறித்து பல்வேறு கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி,

இரும்பு வேலிகளான ஆட்டுப்பட்டியின் மாதிரியை கிராமப்புற விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் .

இது போன்ற இரும்பு பட்டியை அமைத்து அதில் ஆடுகளை பாதுகாப்பாக வைத்தால் நாய்களிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று அவர் விளக்கி கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி ,

இது போன்ற இரும்பு பட்டியை அமைப்பதற்கு சுமார் 60 ஆயிரம் வரை செலவாகும் என்றும்

ஆடுகளை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்றும்

இயற்கை சீற்றங்களால் ஆடு மாடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க சட்டத்தில் இடமிருக்கிறது.

எனவே சிறப்பு நிகழ்வாக இழப்பீடு வழங்குவது குறித்து அதிகாரிகள் அளவில் பேசி முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது .

விரைவில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

நாய்களை கட்டுப்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது .

எனவே உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளின் படி தான் நாய்களை பிடித்து வைக்க முடியும் என்றும் விளக்கம் அளித்தார்.