தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26 தேதி நடைபெற்ற நிலையில், மொத்தம் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்த பொது தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக முடிவுகள் வெளியிடுவதால் தாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் இன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போல 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எந்த தாமதமும் இன்றி இன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
அதன் படி சற்றுமுன் அதிகாரபூர்வமாக 12 ஆம் வகுப்பு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மொத்தமாக 95.20 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் வழக்கம் போல மாணவிகள் அதிகபட்சமாக 97 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், மாணவர்கள் 93. 19 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாவட்ட அளவில் 98.87 சதவீதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து
மாவட்ட அளவில் 98.05 சதவீதம் பெற்று சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடமும், 97.63 சதவீதம் பெற்று கன்னியாகுமரி மாவட்டம் மூன்றாம் இடமும் பிடித்திருக்கிறது. மொத்தம் 7,536 மேல்நிலைப் பள்ளிகள் உள்ள நிலையில், மொத்தம் 2,639 மேல்நிலைப் பள்ளிகள் 100 % சதவீதம் தேர்ச்சிபெற்றுள்ளது. மேலும் மொத்தம் 5,170 மேல்நிலைப் பள்ளிகளின் 95% சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதில் மொத்தம் 489 அரசு பள்ளிகள் 100 சதவீதம், 1,572 அரசு பள்ளிகள் 95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளது.
முக்கிய பாடங்களில் 100% மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்க
தமிழில் 83 பேர்
ஆங்கிலம் 21 பேர்
இயற்பியல் 105 பேர்
வேதியல் 632
இயற்பியல் 784
கணிதம் 732
தாவரவியல் 31
விலங்கியல் 18
கணித அறிவியல் 6945
மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் “ நீங்கள் எதிர் பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை அல்லது நன்றாக தேர்வு எழுதியும் சில மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என கவலை வேண்டாம். நீங்கள் உங்கள் விடை தாள்களை எளிதாக மறுமதிப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு விரைவில் துணை தேர்வு எழுதுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.