வரலாற்றுச் சிறப்புமிக்க எட்டயபுர சமஸ்தானத்தை சேர்ந்த சந்திர சைதன்ய ராஜா என்பவர் சமஸ்தானத்தின் 42-வது பட்டத்துராஜா ஆவார். இவர் எட்டயபுரம் மன்னர்களின் பாரம்பரியத்தைப் பேணி காத்து வருவதுடன், சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் சுதந்திர போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை நீக்க சொல்லியும் குரல் கொடுத்து வருகிறார். இது முற்றிலும் தவறான வரலாற்றுத் தகவல் எனவும் தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்குமாறும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்து ஆண்டு திமுக ஆட்சியில், இந்த வரலாற்று பிழையை உரிய தரவுகளோடு விளக்கி, பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குமாறு அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை சந்தித்து, ராஜா சைதன்யா கோரிக்கை மனு அளித்திருந்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அன்பில் மகேஷ் உறுதி அளித்திருந்தார். மேலும் அடுத்த கல்வி ஆண்டில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
தற்போது விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களை நேரில் சந்தித்து மீண்டும் அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் ராஜா சைதன்யா. நேரில் சந்தித்து மனு அளித்த அவர் “மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவர் எட்டப்பன்” என்ற தவறான வரலாற்றுத் தகவலை தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கிட வேண்டும் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அவர்களுக்கு மனு அளித்துள்ளதகாவும், இது தொடர்பாக எட்டயபுரத்தில் நடைபெற்ற பொதுமக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த விவரங்களையும் அவரிடம் தெரிவித்துதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை கேட்ட அமைச்சர் ராஜ்மோகன் பாடநூல் ஆய்வு கழகத்திடம் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
அந்த கோரிக்கை மனுவில், தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்று மண்ணான எட்டயபுரம், பாரதியார், உமறுப் புலவர், முத்துசாமி தீட்சிதர் போன்ற பல வரலாற்று ஆளுமைகளை உருவாக்கிய இடமாகும். இந்நிலையில், 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக இடம்பெற்றுள்ள தகவல் தவறானது எனக் கூறி, அதனை நீக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. வரலாற்றுப் பிழைகளை திருத்தி, உண்மையான வரலாற்றை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் நோக்கமாகும். எங்கள் கோரிக்கைக்கு செவிமடுத்த மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.