eps photo curtesy; vikatan  
தமிழ்நாடு

“கூட்டத்தை பார்த்து முதல்வருக்கு ஜுரமே வந்துவிடும்” -களத்தில் அதிமுக-பாஜக கூட்டணி…!

பாஜக -உடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம் ஆனால் நாங்கள் வைக்கக்கூடாதா!!??..

Saleth stephi graph

2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 'மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். அதன் முதற்கட்டமாக கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மன் கோயிலில் சாமி தரிசனத்துடன் இன்று காலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.

அதைத்தொடர்ந்து, விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்திய எடப்பாடி பழனிசாமி, அவர்கள் முன்வைத்த வைத்த கோரிக்கைகளுக்குப் பதிலளித்தார்.

தற்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி “கோவை மாவட்டம் அதிமுகவிற்கு ராசியான மாவட்டம்.  வருகின்ற 2026இல் NDA கண்டிப்பாக அதிமுக வெற்றி பெறும். இங்கே திறந்திருக்கிற மக்கள் கூட்டத்தை பார்த்து மு.க.ஸ்டாலினுக்கு இன்று இரவே ஜுரம் வந்துவிடும். பாஜக -உடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம் ஆனால் நாங்கள் வைக்கக்கூடாதா!!?? இதற்கு முன்னர் நீங்கள் பாஜக -உடன் கூட்டணி  வைக்கவில்லையா!?  என கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் இந்த சுற்றுப்பயணத்தில் பாஜக -வினரும் கலந்துகொண்டனர்  பாஜக -அதிமுக கூட்டணி வலுவாக இல்லை என பல விமர்சனங்கள் எழுப்பப்பட்ட நிலையில் அதிமுக-பாஜக இணைந்து இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருப்பது குறிப்பித்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.