ஈரோடு சட்டமன்ற உறுப்பினா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவுக்கு பிறகு, அத்தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவித்தது தேர்தல் ஆணையம். அதன்படி, கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
அதில் ஆளும் கட்சி சார்பில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் களமிறங்கியது. காங்கிரஸ் வேட்பாளராக, அக்கட்சியின் மூத்த தலைவரும், மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து சட்டசபையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி எம்.எல்.ஏ., ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.