தமிழ்நாடு

நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இபிஎஸ்-க்கு விலக்கு...!

Tamil Selvi Selvakumar

பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு கேட்டு எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோர் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கின் விசாரணை நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க எடப்பாடி பழனிசாமிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.