தமிழ்நாடு

மத்திய அரசின் திட்டம் நடைமுறை...கால நீட்டிப்பு வழங்கக் கோரி போக்குவரத்துத் துறை கடிதம்!

Tamil Selvi Selvakumar

பழைய வாகனங்களை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு  போக்குவரத்துத் துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் இயக்கப்பட்டு வரும் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களை உடைத்து அகற்ற வேண்டும் என்ற மத்திய அரசு திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறை, மருத்துவத் துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளில் பயன்பாட்டில் உள்ள 15 ஆண்டுகளைக் கடந்த வாகனங்களை அகற்ற கால நீட்டிப்பு வழங்குமாறு போக்குவரத்துத் துறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.